பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED :148 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்ததால் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலில் மயில் காவடி, தீர்த்த காவடி எடுத்து பக்தர்கள் கிரிவீதியில் மேளதாளத்துடன் வலம் வந்தனர். வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகளவில் வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், வின்ச், ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் தீர்த்தக்காவடி தனி வழி மூலம் அனுமதிக்கப்பட்டு உற்ஸவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.