கோவில் கலசங்கள் திருட்டு விழுப்புரம் அருகே துணிகரம்
ADDED :146 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அம்மன் கோவிலில் கலசங்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரில் 200 ஆண்டுகள் பழமையான பிடாரியம்மன், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை வழக்கம் போல் பூஜை நடந்துள்ளது. மதியம் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த 5 கலசங்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார், நேற்று மாலை விரைந்து சென்று, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.