உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பந்தல் கால் நடும் விழா

செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பந்தல் கால் நடும் விழா

நெல்லிக்குப்பம்: செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பந்தல் கால் நடும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி,சாமுண்டி என சப்த மாதாக்கள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் விநாயகர், முருகன் கோவில்கள் புதியதாக கட்டப்பட்டன. வரும் ஜூன், 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளன. அதற்காக பந்தல் கால் நடும் விழா நடந்தது. இதையொட்டி, பந்தல் காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !