திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :1 hours ago
நடுவீரப்பட்டு: முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 16ம் தேதி அய்யனார் அழைத்து வருதல் நிகழ்வு நடந்தது. 19ம் தேதி பூரணி, பொற்கலை சமேத அய்யனாருக்கு திருக்கல்யாணம், 20ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சுணன் வில் வளைத்தல் நடந்தது. இன்று காலை அரவாண் படுகளம் மற்றும் கோட்டை இடித்தல் நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று (23ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.