அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு ஆயில்யம் சிறப்பு அபிஷேகம்
கிளார்: கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்திய மாமுனிவருக்கு, ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அகத்திய மாமுனிவர், மனைவி உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில், தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அகத்திய முனிவர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, வைகாசி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று, அகத்தியருக்கும், உலோப முத்திரை அம்பிகைக்கும், நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பள்ளி மாணவ – மாணவியர், அகத்தியரின் 108 போற்றியை ஒன்றாக இணைந்து பாராயணம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், கிராமத்தினர் இணைந்து செய்திருந்தனர்.