உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

சின்னாளபட்டி;  குரு பெயர்ச்சியை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சின்னாளபட்டியில் நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி விலக்கு பிச்சை சித்தர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !