வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் பூப்பல்லக்கு
ADDED :2 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 30 பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, பூக்குழி இறங்கி, காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 31ல் சுவாமி பட்டுப் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று முன் தினம் இரவு பூப்பல்லக்கில் வீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார். தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.