வராஹி அம்மனுக்கு பஞ்சமி தீப விளக்கு வழிபாடு
ADDED :1 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வராஹி அம்மனுக்கு பஞ்சமி தீப விளக்கு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி– தியாகதுருகம் சாலையில் பிடாரி என்கின்ற மூர்த்தி அம்மன் வராகி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி வராஹி அம்மனுக்கு பஞ்சமி தீப விளக்கு வழிபாடு நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சுவாமிக்கு பல வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. மாலை 5:00 மணியளவில் நடந்த விளக்கு பூஜையில் பெண்கள் பலர் பங்கேற்று விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.