உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாராஷ்டிரா ஹரிஸ்சந்திரேஸ்வர்!

மகாராஷ்டிரா ஹரிஸ்சந்திரேஸ்வர்!

மகாராஷ்டிரா புனேவிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் காட்டுமலைப்பிரதேசமான கிரிஷ்வர் என்ற இடத்திலிருந்து 8 கி.மீ. தூரம் நடந்து சென்றால் புராணத்துடன் தொடர்புடைய ஹரிஸ்சந்திரேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், மகாராஷ்டிரக் கலைப்பாணியில் கட்டப்பட்ட நூறடி உயர கூரான கோபுரத்துடன் கூடிய பெரிய கோயில் இது. இக்கோயிலில் ஏராளமான தெய்வ சிற்பங்களும் சில கல்வெட்டுகளும் காணப்படுகிறது. இக்கோயில் அருகிலேயே சதுர வடிவத்தில் நான்கு பக்க மண்டபத்துடன் கூடிய பெரிய குளமும் ஊற்றுகளும் உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தக் கோயில் அமைந்திருப்பதால், ஹரிஸ்சந்திரேஸ்வரருக்கு தினசரி அபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மீது அபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, இனிப்பு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் ஒன்று கூடி அமர்ந்து இசைக் கருவிகளுடன் சிவனை நினைத்துப் பக்திப்பாடல்கள் பாடுகிறார்கள். சிவ ஸ்தோத்திரங்களையும் சொல்கிறார்கள். வெளி உலகுக்கு இன்னும் அவ்வளவாக அறிமுகமாகாத இந்த ஹரிஸ்சந்திரேஸ்வரர் கோயிலுக்குச் செல்வது மிகவும் கடினம். பல மைல்கள் காட்டுப்பகுதியில் நடந்தே செல்ல வேண்டும். மிருக நடமாட்டமும் உண்டு. காலம் அறிந்து பாதுகாப்பு செய்து கொண்டு செல்ல வேண்டும். மலை ஆராய்ச்சியாளர்களும், மலையேறப் பழகுபவர்களும் மட்டும் இங்கு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !