வில்லிவாக்கத்தில் நாச்சியர் கோலத்தில் சவுமிய தாமோதர பெருமாள் வீதியுலா
ADDED :1 days ago
வில்லிவாக்கம்: வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சவுமிய தாமோதர பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, வில்லிவாக்கம் முழுவதும் உலா வந்தார்.
வில்லிவாக்கத்தில், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவ விழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், உற்சவ பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று காலை 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய பெருமாள், மாடவீதிகள் மட்டுமின்றி, வில்லிவாக்கம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் வீடுகளின் முன், கோலமிட்டு, மலர் துாவி சுவாமியை வழிப்பட்டனர். காலை 7:00 மணிக்கு கேடய சூர்ணாபிஷேகம், மாலை யானை வாகன உற்சவமும் நடக்க உள்ளது.