பழநி முருகன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சுவாமி தரிசனம்
ADDED :119 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் இந்தியா கிரிக்கெட் வீரர் நடராஜன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பழநி முருகன் கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் நடராஜன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். ரோப்கார் மூலம் முருகன்கோயில் சென்ற அவர் உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் போகர் சன்னதியில் வழிபட்டார். கிரிக்கெட் வீரருடன் பக்தர்கள் கைகுலுக்கினர்.