செவிலிமேடு ராமானுஜர் கோவில் சுவரில் வளர்ந்துள்ள செடிகள்; அகற்ற கோரிக்கை
ADDED :9 hours ago
காஞ்சிபுரம்; செவிலிமேடில் உள்ள ராமானுஜர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் சுவரில் அரச செடிகள் வளர்ந்து வருகிறது. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் கோவில் சுவர் வலுவிழுந்து இடிந்து விழும் சூழல் உள்ளது. எனவே, செவிலிமேடு ராமானுஜர் கோவில் சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்