இன்று ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட வளர்ச்சி, வளம் பெருகும்!
ADDED :22 minutes ago
வைகாசி ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை தரும் ஏகாதசி விரதம் இது. வருடத்தின் மற்ற அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்ததற்குச் சமமான பலனை, இந்த ஒரே ஒரு நாளில் விரதம் இருப்பதன் மூலம் பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஆலய தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.காவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஆலய தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். வீட்டில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது இன்று விரதம் இருப்பவர் பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்!