மக்கள் நலன் வேண்டி மதுரையில் சிறப்பு யாகம்
மதுரை; மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நாம ஸாகர் , நாம ஸ்ங்கீர்த்தனம் மற்றும் விவாஹ யாக நிகழ்ச்சி கடந்த ஜுன் 10ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ருக்மினி ஸமஸ்தான் கோவிந்தபுரம் பிரம்மஸ்ரீ பாலாஜி பட்டர் தலைமையில் பல்வேறு யாகம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இறைவனிடம் பார்த்தனை செய்தனர். திருமணத்தடை நீங்க விவாஹ யாகம், கல்வி அபி விருத்திக்காக ஸ்ரீ தக்ஷிணாமுர்த்தி ஹோமம், ஸ்ரீ ஹக்ரீவ ஹோமம், புத்திர பாக்கியம் பெற புத்ரகாமேஷ்டி யாகம் மற்றும் தொழில் அபிவிருத்தி பெற ஸ்ரீ மஹாலட்சுமி யாகம் என பல்வேறு யாகங்கள் மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்டன.. நிகழ்ச்சியை மாவட்ட தலைவி ஜெயஸ்ரீ ஸ்ரீராம், பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் நடராஜன் மற்றும் மாவட்ட பிராமணர் சங்கக்கிளை நிர்வாகிகள் செய்தனர்.