கமுதி: பாம்புலம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :118 days ago
கமுதி: கமுதி அருகே என்.வாலசுப்பிரமணியபுரம் சந்தன மாரியம்மன், பட்டத் தரசி அம்மன், பாம்புலம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
கோயில் முன் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சந்தன மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடந்தன.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சென்று தண்ணீரில் கரைத்தனர்.