உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்வரன், பெருமாள் கோவில் காணிக்கை எண்ணிக்கை

ஈஸ்வரன், பெருமாள் கோவில் காணிக்கை எண்ணிக்கை

 திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலில், உண்டியல்கள் திறக்கப்பட்டன.

தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நிலையில், உண்டியல் திறந்து, காணிக்கைகள் எண்ணப்பட்டன. செயல் அலுவலர் வனராஜா முன்னிலையில், உண்டியல்கள் திறந்து, காணிக்கை பிரிக்கப்பட்டது. பக்தர்கள் குழுவினர், காணிக்கையை எண்ணினர். காணிக்கை எண்ணி சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. உண்டியல் திறப்பு முதல், காணிக்கை எண்ணி முடிக்கும் வரை, அனைத்து நிகழ்வுகளும், வீடியோ பதிவு செய்து, கோவில் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 12.800 கிராம் தங்கம்; 101.60 கிராம் வெள்ளி மற்றும் 7,55,169 ரூபாய் ரொக்கம்; பெருமாள் கோவில் உண்டியல்களில், 24.500 கிராம் தங்கம்; 61.300 கிராம் வெள்ளி மற்றும் 10,86,983 ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !