வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம்
ADDED :1 days ago
வடலூர்; வடலூர் சபையில் மாத பூச ஜோதி தரிசனம் நடந்தது
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை அமைந்துள்ளது. இங்கு மாத பூசம் நட்சத்திர தினமான நேற்று, ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இரவு, 7:45 மணிக்கு தொடங்கி, 8:45 மணி வரை மூன்று காலங்களாக நடந்த ஜோதி தரிசனத்தை, வடலூர் குறிஞ்சிப்பாடி நெய்வேலி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும், சன்மார்க்கர்கள் வழிபட்டனர். தருமச்சாலையில் வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்கர்கள், வள்ளலார் பின்பற்றாளர்கள் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பெருவெளியில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.