உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானத்தில் சஹஸ்ர கலச பூஜை; ஆனி மாத பூஜைகள் நிறைவு

சபரிமலை சன்னிதானத்தில் சஹஸ்ர கலச பூஜை; ஆனி மாத பூஜைகள் நிறைவு

சபரிமலை; சபரிமலை சன்னிதானத்தில் ஆனி மாத பூஜைகளின் போது சஹஸ்ர கலச பூஜை செய்யப்பட்டது.


சபரிமலை புனித சன்னிதானத்தில், தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் புனித சஹஸ்ரகலச பூஜை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.  பக்தர்கள் நலம், அமைதி, செழிப்பு, உலக நலம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிறப்பாக நடைபெற்று வந்து ஆனி மாத பூஜைகள் நேற்று நிறைவு பெற்றது. நேற்று இரவு 10 மணிக்கு ஹரிஹராசனம் பாடி திரு நடை அடைக்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !