உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம்

உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம்

 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் நிர்வாகி பத்மா சிவலிங்கத்தின் முயற்சியால், திருப்பூரிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை திருவாசகம் முற்றோதல் பாராயணத்தில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக, மாணிக்கவாசகருக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !