கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. கண்டாச்சிபுரம் ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. முன்னதாக நேற்று மாலை நடராஜர் சுவாமிகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் ,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால் 108 மகா அபிஷேகம் நடந்தது. இன்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு திருமஞ்சன விழா நடந்தது. முன்னதாக ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோட்டை நடனம் நிகழ்ச்சியும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், உபயதாரர் பழமலைநாதன் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் செய்தனர்.