உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை நிறைவு விழாவான இன்று கோயில் குருக்கள் அனுமான் வேடமிட்டு பக்தி பரவசத்துடன் வலம் வந்தார்.

ராமேஸ்வரம் கோயில் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக நேற்று ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. விழா நிறைவு நாளான நேற்று, ராமாயண வரலாற்றில் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சீதை, சிவலிங்கம் எடுத்து வரும்படி அனுமானிடம் கூறியதும், கைலாய மலையில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்தார். இதில் அனுமான் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பூஜை செய்தனர். இதனால் சினம் கொண்ட அனுமான் தனது வாலால், சீதை உருவாக்கிய சிவலிங்கத்தைல் இழுத்தார். இதில் வால் அறுந்தது. இதனை நினைவு கூறும் விதமாக இன்று கோயிலில் சுவாமி சன்னதி முன்பு குருக்கள் சந்தோஷ் அனுமான் வேடமிட்டு கையில் கதையுடன் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் பக்தி பரவசத்துடன் வலம் வந்தார். இதன் பின் சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இத்துடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !