உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா நடந்தது.

திருக்கோவிலுார் தியாகி வடிவேல் நகரில், புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் 4ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள், மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், தங்க கவச அலங்காரம், ஆரத்தி பூஜை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஆரத்தி பூஜை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !