மருதமலை கோவில் உண்டியலில் 1.05 கோடி ரூபாய் காணிக்கை
ADDED :102 days ago
மருதமலை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 1.05 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது.
முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 1,05,52,486 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 105 கிராம் தங்கமும்; 5 கிலோ 502 கிராம் வெள்ளியும்; 25 கிலோ 700 கிராம் பித்தளையும் இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் உஷா நந்தினி ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.