திருப்புத்தூர் செண்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :13 minutes ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் அப்பாகுடிப்பட்டியில் செண்பக விநாயகர், பூமரத்தான் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 30 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2, 3 ம் கால யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடானது. தொடர்ந்து சிவாச்சார்யரால் கோபுர கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். ஏற்பாட்டினை அப்பாகுடிப்பட்டி கிராமத்தினர், இளைஞர்கள் செய்தனர்.