உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை: கோயில்களில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: கோயில்களில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: கீழக்கரை மீனவர் குப்பத்தில் உள்ள ஏழு பிள்ளை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று காலையில் விநாயகர் பூஜை, கோமாதா பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது.

வழிப்பிள்ளையார், பாலமுருகன், ஏழு பிள்ளை காளியம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

* ராமநாதபுரம் முதுனாள் கிராமம் பெரியகண்மாய் கரையில் உள்ள 18ம்படி கருப்பண்ணசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடத்தை சுமந்து மூன்று முறை கோயிலை சுற்றி வந்தனர்.

பின்னர் விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் நடந்த தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* சிக்கலில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரர், சிவதர்ம சாஸ்தா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று காலையில் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

ஏற்பாடுகளை சிக்கல் கிராம மக்கள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !