உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றம்

பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றம்

பழநி; பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சின் ரோப் மாற்றப்படுகிறது. இதனால் ஐந்து நாட்களுக்கு மூன்றாவது வின்ச் செயல்படாது.

பழநி முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பழநி கோயிலில் மேலே சென்று வர 3 வின்ச் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது வின்சில் 36 பேர் பயணிக்கும் வகையில் செயல்படுகிறது. வின்சை மேலே இழுத்து, கீழே இறக்க 450 மீ ரோப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோப் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாவது விஞ்சின் ரோப் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 6 லட்சம் மதிப்புடைய 450 மீட்டர் நீளமுடைய ரோப், மாற்ற பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு ரோப் மற்றும் பணி காரணமாக மூன்றாவது வின்ச் நிறுத்தப்பட உள்ளது. ரோப் மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்த பிறகு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வின்ச்கள் செயல்படுகின்றன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !