உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 10.50 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.00 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன், மாவட்ட நீதிபதி மணிமொழி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி. மதிவாணன், ஆலந்தூர் எம்.எல்.ஏ., ஹரீஷ்., உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் பச்சையப்பன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். சென்னை, கடலூர், வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !