உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூர் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

பெரம்பலூர், அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சன்னதியிலுள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசயை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் கலந்து கொண்ட பகத்தர்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !