உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டு விழா சிறப்பு பூஜை
ADDED :1 days ago
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், 8ம் ஆண்டு விழா, நேற்று யாக சாலை பூஜைகள், சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. காலையில், புற்றுக்கோவிலிருந்து, பால் குடம் ஊர்வலம் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி திருமஞ்சனமும், மாலையில் ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனமும் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு மேல், 8ம் ஆண்டு அவதார உற்சவமும், காலை, 7:00 மணி முதல், 10:30 மணி வரை, ஹோமம், நவகலசஸ்தாபிதம், வேங்கடேசப்பெருமாள் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனையும், காலை, 11:45 மணிக்கு, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.