உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி; ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி; ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் காலை, மாலை அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. குளக்கரையில், சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !