உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி தீவிரம்

ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி தீவிரம்

அவிநாசி: அவிநாசி, மங்கலம் சாலையில், தாமரைக் குளம் கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது; கல்கார வரிசையில் முதலாவதாக சித்ரவான வரிசைக்கல் துவக்க விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் வரலாற்றுடன் இணைந்த இந்தக் கோவில், முதலை உண்ட பாலகனை பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவிளையாடலை நினைவு கூரும் புனிதத் தலமாக விளங்குகிறது.

பல ஆண்டுகள் முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பராமரிப்பு இல்லாததால் கோவிலின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதுடன், சுற்றுப்புற மண்டபங்களின் துாண்களும் சேதமடைந்து இடியும் அபாய நிலையில் இருந்தன.இதனைத் தொடர்ந்து, உபயதாரர்களின் பங்களிப்புடன் அறநிலையத்துறையின் வாயிலாக திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியின் ஒரு பகுதியாக, வரும் 22-ம் தேதி காலை 9.30 மணி முதல் 10:00 மணிக்குள் கல்கார வரிசையின் முதல் கட்டமான சித்ரவான வரிசைக்கல் துவக்க விழா நடைபெற உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !