ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா
கடலுார்: கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் தேர்த் திருவிழா நடந்தது.
கடலுார், முதுநகர் ஐந் து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரமோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 31ம் தேதி செடல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று , மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தில்லை கோபாலகிருஷ்ணன், உதயவேலு, முரளிகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வன்னியர் குலஷத்திரியர்கள் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து தெப்பல் உற்சவம் நடந்தது. இன்று (3ம் தேதி) இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், நாளை 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.