உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயிரவன்பட்டி வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவம் துவக்கம்

வயிரவன்பட்டி வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவம் துவக்கம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டியில் வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவம் துவங்கியது. ஆக.,14ல் வயிரவருக்கு தேரோட்டமும், ஆக.,16ல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணமும் நடைபெறும்.


நகரத்தார் நவ கோயில்களில் ஒன்றான இங்கு வயிரவசுவாமி பிரதான மூர்த்தியாக காலபைரவர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இதனால் ஆடி மாதத்தில் வயிரவசுவாமிக்கு 11 நாட்கள் பிரமோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஆக., 5ல் அனுக்ஞை பூஜைகளுடன் பூர்வாங்க பூஜைகள் துவங்கி மாலையில் சிவாச்சார்யருக்கு காப்புக்கட்டப்பட்டது. தொடர்ந்து மறுநாள் காலை 8:00 மணி அளவில் கோயில் உட்பிரகாரத்தில் யாகசாலையில் சிவாச்சார்யர்களால் கலச பூஜை நடந்தது. 1தொடர்ந்து விநாயகரும், உற்சவ வயிரவரும் கொடி மரத்துக்கு முன் எழுந்தருளினர்.  பின்னர் சூரியன்,சந்திரன்,பைரவரின் ஆயுதங்கள்,நந்தி படம் வரையப்பட்ட கொடிபடத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:40 மணிக்கு சிவாச்சர்யர்களால் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தர்ப்பை புல், பட்டு சாத்தப்பட்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கும், உற்ஸவ சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. சிம்ம வாகனத்தில் வயிரவர் திருவீதி வலம் வந்தார். தினசரி காலை9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.


ஆக.14 ல் காலை 9:15 மணிக்கு வயிரவர் தேரில் எழுந்தருளலும், மாலை 4:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தலும் நடைபெறும். ஆக.,15ல் காலையில் தீர்த்தவாரியும், இரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கும் நடைபெறும். 11ம் திருநாளான ஆக.16ல் காலையில் பஞ்சமூர்த்திகள், வயிரவசுவாமிக்கு மகா அபிேஷகமும், மாலையில் திருக்கல்யாணம், இரவில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !