சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலை கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் சித்தம் அழகியார் உழவார் திருக்கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி இணைந்து லட்சுமி குபேர திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடத்தினர். விழுப்புரம் ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் பூஜையை துவக்கி வைத்தார். சித்தம் அழகியார் உழவார் திருக்கூட்ட அமைப்பாளர் வேலாயுதம் தமிழில் மந்திரங்கள் வாசித்து வழிபாடுகளை நடத்தினர். பாலக்காடு சாந்தி தீபம் ஆஷ்ரம சிவனடியார் ஸ்ரீகண்டேஷ்வரன் சுவாமி ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை டாக்டர்கள் பாபுசக்கரவர்த்தி, இந்துபாலா தலைமை தாங்கினர். ஆரிய வைசிய சங்க துணை தலைவர் பெருமாள், உஷா பட்டு மாளிகை உரிமையாளர் ஹேமலதா, கமலா பல்ப் சென்டர் உரிமையாளர்கள் வைத்திலிங்கம், சுதா, கிருஷ்ணா மெட்டல்ஸ் உரிமையாளர்கள் ராம்ராஜ், ஜெயக்கமலா, ஜெயலட்சுமி ஓட்டல் உரிமையாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர். இசை ஆசிரியர் ராஜலட்சுமி திருவாசகம், தேவாரம் பாடலிசை நடத்தினார். திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பூஜைக்கான பொருட்கள், அன்னதானம் ஆகியன கோவில் சார்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் அடிகளார், ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் செய்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.