உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி காளியம்மனுக்கு ஆடி விழா துவக்கம்

ஆதி காளியம்மனுக்கு ஆடி விழா துவக்கம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் அன்னை ஸ்ரீ ஆதி காளியம்மன் கோயில் 24ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. மூலவரான ஆதி காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது.

பின் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. ஆக.,29ல் வேல் குத்துதல், அக்கினி சட்டி, பூக்குழி, ஆக.,30ல் பால்குடம், பறவை காவடி, முளைப்பாரி ஊர்வலம், அம்மன் வீதி உலா நடைபெறும்.

விழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

89758ஆதி காளியம்மனுக்கு ஆடி விழா துவக்கம்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !