உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு அம்மன்: பத்ரகாளியம்மனை தரிசித்தால் ராகுதோஷம் தீரும்

தினமும் ஒரு அம்மன்: பத்ரகாளியம்மனை தரிசித்தால் ராகுதோஷம் தீரும்

ராகுதோஷம் தீர...  ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மனை தரிசிப்போம்.

இப்பகுதி விவசாயியின் பசு ஒன்று, மேய்ச்சலுக்கு பின் வெறும் மடியுடன் திரும்பியது.

மறுநாள் அதை பின்தொடர்ந்த விவசாயி, புதரில் பாம்பு ஒன்று பசுவிடம் பால் குடிப்பதை பார்த்தார். அன்றிரவு அவரின் கனவில் காளி தோன்றி, ‘பாலைக் குடித்து பசியாறியவள் நானே. எனக்கு கோயில் கட்டு’ என ஆணையிட்டாள். அதன்படி கோயில் கட்டப்பட்டது.

கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் இருக்கிறாள். அசுரனான மகிஷனின் தலை மீது கால் வைத்துள்ளதால் ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுகிறாள். திருமணம், தொழில் முயற்சியில் ஈடுபடும் முன் அம்மனிடம் பூவாக்கு கேட்கின்றனர். இங்கு தரும் தீர்த்தத்தை குடித்தால் நோய் தீரும்.

ராகு தோஷம் தீர வெள்ளிக்கிழமை(காலை 10:30 – 12:00 மணி), ஞாயிற்று கிழமை(மாலை 4:30 – 6:00 மணி) ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுகின்றனர். பங்குனி திருவிழாவில் 60 அடி நீள குண்டத்தில் தீ மிதிக்கின்றனர்.

எப்படி செல்வது: ஈரோட்டில் இருந்து பவானி வழியாக 40 கி.மீ.,     
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 –  8:00 மணி
தொடர்புக்கு: 90033 85475, 77088 67846


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !