உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

போடி; ஓணம் பண்டிகையை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு அலங்கார த்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஐயப்ப பக்த சபை குருநாதர் மாரிமுத்து தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வகணபதி, பொருளாளர் பாலு, துணைத் தலைவர் கள் முத்துச்சாமி, பிரபு, துணைச் செயலாளர்கள் லட்சுமி நாராயணன், முனியப்பன் முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கிரி செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !