உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆவணி பூர்வ பட்ச சதுர்தசியில் நடராஜருக்கு திருமஞ்சனம்

உத்தரகோசமங்கையில் ஆவணி பூர்வ பட்ச சதுர்தசியில் நடராஜருக்கு திருமஞ்சனம்

உத்தரகோசமங்கை: ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்தசியில் நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் நேற்று மாலையில் நடந்தது. வசந்தகாலம், கோடைகாலம், மழைக்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என ஆறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு தகுந்தாற்போல் ஆறு வகையான அபிஷேகங்கள் நடராஜபெருமானுக்கு உத்தரகோசமங்கை கோயிலில் நடக்கின்றன. சிவபெருமானை அபிஷேக பிரியர் என அடியார்கள் குறிப்பிடுகின்றனர். உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி முன் உற்ஸவமூர்த்தியான நடராஜப் பெருமான் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்திலும், ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்திலும், ஆவணி மாத பூர்வ பட்ச சதுர்தசியிலும், புரட்டாசி மாத பூர்வ பட்ச சதுர்தசியிலும் அபிஷேகங்கள் நடக்கிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் உலகப்பிரசித்தி பெற்ற மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாசி மாத பூர்வ பட்ச சதுர்தசியிலும் அபிஷேகம் நடக்கிறது. உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதி முன் ஆவணி பூர்வபட்ச சதுர்தசியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. உற்ஸவ மூர்த்திகளின் உள்வீதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !