ஆவணி அவிட்டம்; திருத்தணி முருகன் கோவிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து
ADDED :1 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, நான்கு மணி நேரம் கோவில் நடை சார்த்தப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இன்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, மதியம் 12:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, கோவில் நடை சார்த்தப்பட்டது. அந்த நேரத்தில், கோவில் குருக்கள் பூணுால் மாற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.