கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சனி சிறப்பு வழிபாடு
ADDED :23 hours ago
கோவை ; ஆவணி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.