/
கோயில்கள் செய்திகள் / ஆவணி பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
ஆவணி பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :4 days ago
கோவை : ஆவணி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோடு புட்டு விக்கி அருகில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
பஞ்சமி திதி என்பது வாரகியை வழிபடுவதற் கான மிக முக்கியமான நாள். தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாரகிஅம்மன் அவதரித்தார். இதனை முன்னிட்டு இன்று ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சர்வ அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வணங்கினர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.