கரிசல்பட்டியில் வழங்கப்பட்ட மிலாடி நபி நெய்ச்சோறு
ADDED :1 hours ago
எஸ்.புதூர்: சிங்கம்புணரி அருகே மிலாடி நபியை முன்னிட்டு கிராம மக்களுக்கு அசைவ குழம்பு, நெய் சோறு வழங்கப்பட்டது.
எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் மிலாடி நபி விழா துவங்கப்பட்டது. இதையொட்டி ஜமாத் கமிட்டி சார்பில் 20க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கிராமத்தினர் உள்ளிட்ட 4000 பேருக்கு 800 கிலோ அரிசி கொண்டு நெய் சோறு தயாரிக்கப்பட்டது. 75 ஆடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டு நெய்சோறு தயாரிக்கப்பட்டது. கிராம்த்தை சேர்ந்த முஸ்லீம் ஹிந்து உள்ளிட்ட 700 குடும்பங்களுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டில் 5 கிலோ நெய் சோறுடன் 4 முட்டை பாரம்பரிய முறைப்படி வழங்கப்பட்டது. மேலும் அனைத்து சமுதாய மக்களுக்கும் நெய்ச்சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. கரிசல்பட்டி கிராமத்தினர் ஒரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.