லட்சுமி கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் லட்சுமிநகர், லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி, விமான கலசங்கள் நிறுவுதல், முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பெருந்திருமகள் வழிபாடு, அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் நடந்தது.
அதன்பின், முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், நாட்டிய விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல், எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பல பூஜைகள் நடந்தது.
நேற்று, 6ம் தேதி, காலையில், திருப்பள்ளியெழுச்சி, சுற்று பூஜை வழிபாடுகள், இரண்டாம் கால வேள்வி, திருக்கலசம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. இதை தொடர்ந்து விமான கலசம் மற்றும் மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. மேலும், பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பெருந்திருமஞ்சனம், பதின்மங்கலக்காட்சி, பேரொளி வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.