வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது பரதநாட்டியம் ஆடிய மாணவிகள்
புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது தொடர்ந்து 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி 131 மாணவிகள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்..
புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உலக சாதனைக்கான பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டிய சாஸ்ராலியா பள்ளியின் 131 மாணவியர் தொடர்ந்து 20 நிமிடங்கள் பானை மீது பரதநாட்டியம் ஆடி சாதனை புரிந்தனர். இடைவிடாது 131 மாணவியருக்கு பானை மீது பரதநாட்டியம் ஆடியது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. முடிவில் சாதனைக்கான சான்றிதழை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர் வழங்கினார். விழாவில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பாஸ்கர்,பாரதியார் பல்கலைக்கூட நடன பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர், எந்த ஒரு கலையையும் லவ் பண்ணி கற்று கொண்டால் உலக சாதனை செய்யலாம் என்றார்.