உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜை

காரமடை அரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜை

காரமடை: நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடியின் மக்கள் சேவையை போற்றும் வகையிலும், அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், காரமடை அரங்கநாதர் கோவிலில் பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பின் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மோடி ஏன் என்ற புத்தகமும் வழங்கப்பட்டன. இதில், பா.ஜ., வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ், காரமடை நகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !