உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கவயல் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

தங்கவயல் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

தங்கவயல்: உரிகம் எலக்ட்ரிக்கல் காலனியில் அமைந்துள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 15 – 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், ஐதீக முறைப்படி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 5:30 மணிக்கு துவங்கி, நான்காம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடுடன், காலை 8:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், தீர்த்த பிரசாத விநியோகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !