உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் மொட்டை அடித்தால் புகார் செய்யலாம்!

கோவில்களில் மொட்டை அடித்தால் புகார் செய்யலாம்!

கோவில்களில், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்ய, அந்தந்த கோவில் செயல் அலுவலரின் மொபைல் எண், அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களில், மொட்டை அடிப்பதற்கு, அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிக அளவில் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அதிக அளவில், முடி நேர்த்திக்கடன் செலுத்தும், பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட ஆறுபடை முருகன் @காவில்கள் மற்றும் முதுநிலை கோவில்களில், மொட்டை அடிப்பதற்கு, அதிகப்படியான கட்டணம் வலித்தால் புகார் செய்யலாம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், செயல் அலுவலரின் மொபைல் எண் எழுதப்பட்டுள்ளது. பக்தர்கள் மொட்டை போடும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்து, தங்களை "மொட்டை அடிப்பவர்கள் குறித்து, அதிகாரியிடம் புகார் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

‌- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !