உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கடலில் நீராடிய பெண் உட்பட 5 பக்தர்கள் கால்முறிவு

திருச்செந்துார் கடலில் நீராடிய பெண் உட்பட 5 பக்தர்கள் கால்முறிவு

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோயில் கடல் சீற்றம் காரணமாக நீராடிய பெண் உட்பட 5 பக்தர்கள் கால் முறிவு ஏற்பட்டு அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோயில் கடல் அமாவாசை மற் றும் பவுர்ணமி நாட்களில் உள் வாங்குவதும், பின் னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்க மான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக ளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளதால் திருச்செந்துார் கோ கோயிலில் கூட்டம் பல மடங்கு அதிகரித்து உள் ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் அதி காலை முதலே பக்தர்கள் கடலில் நீராட துவங்கினர். அந்த சமயம் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காரணமாக காணப்பட்டது. இதனால் கடலில் குளித்த பக்தர்கள் கடல் அலையில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. இதில் காங்கேயம் குணசேகரன்(45), பண் ருட்டியைச் சேர்ந்த சரோஜா(42), திருச்சி இலஞ்சியம் (55), புதுக் கோட்டையைச்சேர்ந்தராஜ குமாரி(52), மூதாட்டி கிருஷ்ணவேணி(75) ஆகி யோருக்கு காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தனர். அப்போது அங்கு பணியிலிருந்தகட லோர பாதுகாப்பு குழும போலீஸ் கார்த்திக், கடற் கரைபாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா, சுதாகர், ராமர், இசக்கிமுத்து மற்றும் கோயில் போலீசார் உதவியுடன் கோயில் ஆம்புலன்சில் ஏற்றி திரு செந்துார் அரசு ஆஸ்பதிரிக்கு அனுப்பி வை கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்செந்துார் கடல் பாறை நிறைந்த கடல் பகுதி என்பதால் பக்தர் கள் பாதுகாப்புடன் நீராட வேண்டுமென மென கோயில் நிர்வாகம் மற்றும் போலீ சார் அறிவுரை வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !