உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாம் விதிப்படி அமையும் உறுதிபடச் சொல்கிறார் அவ்வையார்

எல்லாம் விதிப்படி அமையும் உறுதிபடச் சொல்கிறார் அவ்வையார்

* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.
* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி சோறும், உடுக்க நான்கு முழமும் போதும். ஆனால் நாம் ஆசைப்படுவதோ கோடி விஷயம்.  
* ‘சிவாய நம’ என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் வழி.
* பிறருக்கு செய்த சிறுஉதவி கூட நிச்சயம் ஒருநாள் உனக்கு நன்மை தரும்.
* இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே மிஞ்சும்.
* வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா... அதுபோல் நல்லது செய்யாமல் கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன்.
* எவ்வளவுதான் முயன்றாலும் தகுந்த காலம் கூடினால் மட்டுமே, உன் செயலுக்கு பலன் கிடைக்கும்.
* முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு ஏற்பவே, இப்பிறவியில் செல்வம் சேரும்.  
* நல்ல குணமுள்ள மனைவி அமைந்து விட்டால் உனக்கு வேறெதுவும் தேவையில்லை.
* விநாயகரை வணங்கு. நல்ல மனமும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும்.  * நீ செய்த புண்ணியத்தின் படியே முயற்சியில் ஒருவனுக்கு வெற்றி கிடைக்கிறது.
* பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என வருந்தாதே.
* உயிர் பிரியும் போது பணம் உன்னுடன் வராது. அதனால் பணத்தை வைத்து நல்லதை செய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !