/
கோயில்கள் செய்திகள் / நவராத்திரி ஐந்தாம் நாள்: மோகினி அலங்காரதில் அம்பிகையை வழிபட கேட்டது கிடைக்கும்; நினைப்பது நடக்கும்.
நவராத்திரி ஐந்தாம் நாள்: மோகினி அலங்காரதில் அம்பிகையை வழிபட கேட்டது கிடைக்கும்; நினைப்பது நடக்கும்.
ADDED :16 hours ago
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது சிறப்புமிக்கதாகும். நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். மோகினி தேவி, விஷ்ணு பகவானின் மிகவும் தெய்வீகமான மற்றும் தனித்துவமான அவதாரமாக கருதப்படுகிறது. கடின உழைப்பாளிகள், உழவர்கள், அலுவலகங்களில் பணி செய்வோர், உழைப்பின் முழுப்பலனை பெற, அன்னையின் அருள் அவசியம் வேண்டும். இன்று அம்பிகையை சும்ப, நிசும்பர்களை வதம் செய்த மோகினியாக அலங்கரித்து வழிபட வேண்டும். அம்பாளுக்கு கடலைமாவு கோலம் இட்டு, கதம்பம், மரிக்கொழுந்து சாற்றி பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும். இன்று கொலுவில் மோகினி அலங்காரதில் வீற்றிருக்கும் அம்பாளை வழிபட கேட்டது கிடைக்கும்; நினைப்பது நடக்கும்.